தமிழக அரசு இ-பாஸ் நடைமுறையில் இருந்து முழுமையான தளர்வு அளிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில், மக்கள் மாவட்டம் விட்டு வேறு மாவட்டம் செல்ல வேண்டும் என்றால், கண்டிப்பாக இ-பாஸ் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் முக்கிய காரணங்களுக்கு வெளி மாவட்டங்களுக்கு செல்ல சிலர் விண்ணப்பித்தும் சில காரணங்களால் அது நிராகரிப்படுவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனிடையே முதலமைச்சர் பழனிசாமி விண்ணப்பித்த அனைவருக்கும் இ- பாஸ் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இந்நிலையில் இது குறித்து தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், வரும் 17ஆம் தேதி முதல் இ-பாஸ் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பாஸ் வழங்கப்படும் என முதல்வர் உத்தரவிட்டதை வரவேற்கிறேன். அதே நேரத்தில் பொதுமக்கள் சிரமத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு இ-பாஸ் நடைமுறையில் இருந்து முழுமையான தளர்வு அளிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
ஹரியானா: இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவரும், ஹரியாணா முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சௌதாலா(89) மாரடைப்பால் காலமானார்.…
சென்னை: 2025ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி 6ம் தேதி தொடங்கும் என்றும், அன்று தமிழக ஆளுநர்…
நெல்லை : இன்று தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஆழ்த்தும் வகையில் அதிர்ச்சியான சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்துள்ளது. பட்ட பகலில் நெல்லை…
டெல்லி: முன்னாள் முப்படைகளில் தலைமைத் தளபதியான பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்ததற்கு மனித…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக திமுகவை விமர்சித்து பேசி வருவதால் அவருக்கு திமுக…
சென்னை : தரமான படைப்புகளை எப்போது ஏமாற்றம் அளிக்காமல் மக்களுக்கு கொடுக்கும் இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். இதுவரை இவர் இயக்கிய…