முழுமையான நெல் கொள்முதல் தமிழகத்தில் தான் நடைபெறுகிறது – அமைச்சர் காமராஜ்!
முழுமையான நெல் கொள்முதல் தமிழகத்தில் தான் நடைபெறுகிறது என அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.
நாட்டிலேயே தமிழகத்தில் மட்டும்தான் விவசாயிகளிடம் இருந்து முழுமையாக நெல் கொள்முதல் செய்யப்படுகிறது என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அவர்கள் கூறியுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களை அமைச்சர் ஓ எஸ் மணியன் மற்றும் காமராஜர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் காமராஜ் நாட்டிலேயே தமிழகத்தில் தான் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு முழுமையாக நெல் கொள்முதல் செய்யப்படுவதாக கூறியுள்ளார். டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.
மேலும், விவசாயிகளுக்காக விடுமுறை நாட்களில் கூட நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். அதுபோல இந்தியாவிலேயே தமிழகம் தான் முழுமையாக நெல் கொள்முதல் விவசாயிகளிடமிருந்து செய்வதாக தெரிவித்துள்ளார். அதன்பின் நெல்லின் ஈரப்பதம் குறித்து பேசிய அவர் மழை பெய்கின்ற காலகட்டத்தில் நெல் ஈரப்பதம் அடைகிறது. இதை பெரிய பிரச்னையாக்க வேண்டாம், ஒரு மணி நேரம் வெயில் அடித்தால் இவை அனைத்தும்காய்ந்து விடும் என கூறியுள்ளார்.