கோவையில் இன்று முதல் முழு ஊரடங்கு..எந்தவித தளர்வுகளும் கிடையாது.!
கோவை மாவட்டத்தில் இன்று மாலை 5 மணி முதல் வரும் 27ஆம் தேதி காலை 6 மணி வரை 3 நாட்களுக்கு முழு முடக்கம்.
கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கோயம்புத்தூரில் இன்று மாலை 5 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு இந்நிலையில் இன்று மாலை முதல் திங்கட்கிழமை வரையில் எவ்விதத் தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
கோவையில் நேற்று புதிதாக 189 தொற்றுகள் பதிவான நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எதற்கெல்லாம் அனுமதி:
- மருத்துவம், பால் மற்றும் மின்சாரம் போன்ற அத்தியாவசிய சேவைகள் மட்டும் அனுமதிக்கப்படும்.
- ஊரடங்கை மீறி, வெளியில் நடமாடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- உழவர் சந்தை, மார்க்கெட், மளிகைக் கடைகள், மீன் மார்க்கெட், பூ மார்க்கெட், இறைச்சிக் கடைகள், டாஸ்மாக் கடைகள், வர்த்தக தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட எவ்வித அமைப்புகளும் இயங்காது.
- கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.