சூரப்பா குறித்து புகார்கள் தொடர்ச்சியாக எழுந்த நிலையில், சூரப்பாவிடம் விரைவில் நேரில் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுரப்பா மீது ரூ.280 கோடி ஊழல் செய்ததாக புகார்கள் எழுந்தன.அவர் மீது இது குறித்து புகார்கள் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டது.எனவே சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரிக்க நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணைக்குழுவை அமைத்தது தமிழக அரசு .மேலும் மூன்று மாதங்களில் இந்த விசாரணைக்குழு அறிக்கை அளிக்கவும் அரசு உத்தரவிட்டது.சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரிக்க விசாரணை ஆணைய நீதிபதி கலையரசன் பொறுப்பேற்றார்.
இது தொடர்பாக நீதிபதி கலையரசன் கூறுகையில்,அடுத்த வாரம் துணை வேந்தர் சூரப்பா மீது ஊழல் புகார் தெரிவித்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் எனக்கூறியுள்ளார்.பின்பு தனித்தனியாக அவர்களிடம் விசாரணை நடத்தப்படும்.புகாரின் பேரிலே சூரப்பா மீதான அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.மேலும் இவ்விவகாரம் தொடர்பாக இன்று முதல் அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என்று கூறினார்.
அதன்படி மின்னஞ்சலில் சூரப்பா மீது புகார்கள் வந்துள்ளதாக விசாரணை குழு தெரிவித்துள்ளது.மின்னஞ்சல் புகார்கள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் புகார்கள் மீது முகாந்திரம் இருந்தால் புகார் கொடுத்தவர்களை நேரில் வரவழைத்து விளக்கம் கேட்கப்படும் என்றும் விசாரணை குழு கூறியுள்ளது. மேலும் துணை வேந்தர் சூரப்பாவிடம் விரைவில் நேரில் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…