அதிமுக தேர்தல் அறிக்கைக்கு தடை கோரி தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு!

Default Image

அதிமுக தேர்தல் அறிக்கைக்கு தடை விதிக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு சமீபத்தில் அதிமுக தேர்தலை அறிக்கையை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டிருந்தனர். இதில், இலவச வாசிங்மிஷின், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை, வருடத்திற்கு 6 இலவச சமையல் எரிவாயு என பல்வேறு திட்டங்கள் இடம்பெற்றிருந்தது.

இதையடுத்து அதிமுக சாத்தியமில்லாத திட்டங்களை அறிவித்துள்ளது என்றும் எப்படி அதனை செயல்படுத்த முடியும் எனவும் கேள்வி எழுந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், ஏற்கனவே தமிழகத்தின் கடன் சுமை சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் உள்ள நிலையில், அதிமுக அறிவித்திருக்கும் திட்டங்கள் சாத்தியமாகுமா என சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த நிலையில், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற சாத்தியமில்லாத திட்டத்தை அறிவித்துள்ளதாக குறிப்பிட்டு அதிமுக தேர்தல் அறிக்கைக்கு தடை விதிக்க கோரி மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்