முதல்வர் கொடுத்த புகார்கடிதம்… தமிழக ஆளுநர், டெல்லியில் தலைமை வழக்கறிஞருடன் சந்திப்பு.!

R.N.Ravi met Advocate

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முக்கிய ஆலோசனைக்காக சந்தித்து பேசியிருக்கிறார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒருவாரம் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருடன் சந்தித்து பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தமிழக அரசுடன் ஆளுநருக்கு இருந்து வரும் நிலைப்பாடு குறித்தும் சட்ட ஆலோசனைக்காகவும் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருடன் இந்த சந்திப்பில் பேசியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஆளுநர் சந்தித்துள்ள நிலையில் இன்று தலைமை வழக்கறிஞருடன் ஆளுநர் சந்தித்துள்ளார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்த நீண்ட புகார் கடிதத்தை குடியரசுத்தலைவருக்கு அனுப்பியிருந்த நிலையில் ஆளுநரின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்குவது குறித்து சட்ட ஆலோசனை பெறவேண்டும் என அமித்ஷா கூறப்பட்ட நிலையில், இந்த சந்திப்பில் அது குறித்து பேசுவதற்காக ஆளுநர், தலைமை வழக்கறிஞருடன் சந்தித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்