கமலஹாசன் மீது 13 காவல் நிலையத்தில் புகார் ! முன் ஜாமீன்கோரி மனு !
மக்கள் நீதி மைய்யத்தின் தலைவர் கமலஹாசன் அரவக்குறிச்சி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட பொழுது, இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கோட்சே என்று தெரிவித்தார். இதற்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தினால் கமல் மீது மத உணர்வை புண்படுத்தும் வகையில் பேசுதல், மத ரீதியில் மோதலை தூண்டும் வகையில் பேசுதல் என இரண்டு பிரிவுகளில் 13-க்கும் மேற்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் கமல் தன் மீது உள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் , இதனை அவசர வழக்காக விசாரிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கமலஹாசன் முறையிட்டார்.
அப்போது கூறிய நீதிபதி வழக்கு மற்றும் வழக்கு விசாரணைக்கு தடை கோரும் மனுக்களை விடுமுறை கால அமர்வில் விசாரிக்க இயலாது என கூறினார்.
மேலும் முன்ஜாமின் மனுவை தாக்கல் செய்தால் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தார்.இந்நிலையில் கமல்ஹாசன் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார்.