அதிக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம் – அமைச்சர் சிவசங்கர்

Default Image

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம் என அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு.

சென்னை, தலைமைச் செயலகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர், தமிழகம் முழுவதும் 21, 22, 23 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் உள்பட 16,888 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு நக்கரங்களில் இருந்து பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது எனவும் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர், ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம் என்று அறிவித்தார். அதன்படி, கூடுதல் கட்டண தொடர்பான புகார்களுக்கு 1800 425 6451 என்ற அழைக்கலாம் என்றும் தீபாவளி பண்டிகை காலத்தில் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்காத அளவிற்கு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்