அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரிக்கும் விசாரணை ஆணையம் , உயர்கல்விதுறை செயலருக்கு கடிதம் எழுதியுள்ளது.
அரியர் தேர்வுகள் ரத்து மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்று தமிழக அரசின் நிலைப்பாட்டிற்கு அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் சூரப்பா அதிருப்தி தெரிவித்திருந்தார்.எனவே இது தொடர்பாக அவர் மீது புகார்கள் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டது.
எனவே சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரிக்க நீதிபதி கலையரசன் தலைமயில் விசாரணைக்குழுவை அமைத்தது தமிழக அரசு .மேலும் மூன்று மாதங்களில் இந்த விசாரணைக்குழு அறிக்கை அளிக்கவும் அரசு உத்தரவிட்டது.சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரிக்க விசாரணை ஆணைய நீதிபதி கலையரசன் பொறுப்பேற்றார்.
இந்நிலையில் விசாரணை ஆணைய தலைவர் நீதிபதி கலையரசன் உயர்கல்விதுறை செயலருக்கு கடிதம் எழுதியுள்ளார்.அவரது கடிதத்தில்,சூரப்பா மீதான புகாரை விசாரிக்கும் ஆணையத்துக்கு கூடுதல் பணியாளர்கள், அலுவலகம் வழங்ககோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லி: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது…
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…