கோவை பிரசாரத்தில் தேர்தல் விதிமீறல்..! பிரதமர் மோடி மீது பரபரப்பு புகார்
PM Modi: தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட போது பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக தேர்தல் ஆணையத்திடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேர்தல் விதிகளை மீறிய பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை தேர்தல் அலுவலகத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயற்குழு சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Read More – மேடையில் ஓபிஎஸ்… 57 வருசமா 2 கட்சிகள்.. மாற்றம் வேண்டும்.! அன்புமணி ராமதாஸ்.!
இது தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “மக்களவை தேர்தல் அட்டவணை கடந்த 16- ஆம் தேதி பிற்பகலில் வெளியிடப்பட்டது.
Read More – 400 தொகுதிகளுக்கு மேல் வெல்வதே இலக்கு… பிரதமர் மோடி உரை!
இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளன. இந்த நிலையில் 18 ஆம் தேதியான நேற்று, பிரதமர் மோடி கோவை நகரத்தில் தெருத்தெருவாக வாகனப் பேரணி நடத்தி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.
Read More – அதிமுக சார்பாக பேசிய ஓ.பி.எஸ்.! பிரதமர் மோடி கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் ருசிகரம்.!
இந்த நிகழ்வுக்கு பள்ளிக் குழந்தைகளை கட்டாயப்படுத்தி சாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இது தேர்தல் நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறிய செயலாகும்.
தேர்தல் நடத்தை விதிகளை மீறிய பாஜகவினர் மீதும், மோடியின் மீதும் தேர்தல் ஆணையம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.