பரங்கிமலை காவல் நிலையத்தில் குஷ்பு மீது புகார்..!
காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்பு, நேற்று முன்தினம் டெல்லி சென்று தன்னை பா.ஜ.க-வில் இணைத்துக் கொண்டார். பாஜகவில் இணைந்த பின் சென்னை விமான நிலையத்தில் நேற்று பேட்டியளித்த குஷ்பு, காங்கிரசை மூளை வளர்ச்சி இல்லாத கட்சி என கூறினார்.
இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் சென்னை பரங்கிமலை காவல் நிலையத்தில் இணையவழி புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், மனவளர்ச்சி குன்றியோரை அவமதிக்கும் வகையில் விமர்சித்துப் பேசிய நடிகை குஷ்பு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.