துணைவேந்தர் சூரப்பா மீதான புகார் – விசாரணை ஆணைய நீதிபதி பொறுப்பேற்பு
அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரிக்க விசாரணை ஆணைய நீதிபதி கலையரசன் பொறுப்பேற்றார்.
பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு அரியர் தேர்வுகள் ரத்து மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்று தமிழக அரசின் நிலைப்பாட்டிற்கு அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் சூரப்பா அதிருப்தி தெரிவித்திருந்தார்.எனவே இது தொடர்பாக அவர் மீது புகார்கள் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டது.
எனவே சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரிக்க நீதிபதி கலையரசன் தலைமயில் விசாரணைக்குழுவை அமைத்தது தமிழக அரசு .மேலும் மூன்று மாதங்களில் இந்த விசாரணைக்குழு அறிக்கை அளிக்கவும் அரசு உத்தரவிட்டது.
விசாரணைக்குழு தரும் அறிக்கையின் அடிப்படையில் சூரப்பா மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .எனவே அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா இது குறித்து கூறுகையில்,என் மீதான புகார்கள் குறித்து விசாரிக்க தமிழக அரசு குழு அமைத்தது அதிர்ச்சியளிக்கிறது என்று கூறினார்.
இந்நிலையில்அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரிக்க விசாரணை ஆணைய நீதிபதி கலையரசன் பொறுப்பேற்றார்.சூரப்பா மீதான குற்றச்சாட்டு குறித்த ஆவணங்கள் அனைத்தும் நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.