தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு இணைப்பு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் நடைபெற்ற ஊழலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரடி தொடர்பு உள்ளதாக புகார் எழுந்துள்ளது. நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் மழை காலங்களில் வீணாக கடலில் கலக்கும் நீரை வறண்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தாமிரபரணியாறு, நம்பியாறு, திருமேனியாற்றுடன் கால்வாய் தொண்டி இணைக்கும் திட்டத்தில் பெரிய அளவில் ஊழல் நடைபெற்றுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இணைப்பு திட்டத்திற்கு பணிகள் நடைபெறாமல் பணம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு பேட்டி:
இந்த ஊழல் குறித்து தமிழக தலைமை செயலாளர் கிரிஷா வைத்தியநாதனுக்கு கடிதம் எழுதியுள்ளதாக அப்பாவு தெரிவித்துள்ளார். தலைமை செயலாளர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடப்போவதாவும் கூறியுள்ளார்.
மழைக் காலங்களில் அணைகளில் போதிய நீரை சேமித்து வைத்தாலும், தாமிரபரணி மற்றும் அதன் துணை ஆறுகளிலிருந்து 13.8 டி.எம்.சி நீர் வீணாக கடலில் கலக்கிறது. இதனை தடுக்கும் வகையில் வெள்ளநீர் கால்வாய் திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தில் தாமிரபரணி ஆறு, கருமேனி ஆறு, நம்பியாறு, பச்சையாறு, கோரையாறு, எலுமிச்சையாறு ஆகிய 6 நதிகள் இணைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…