சட்டமன்ற நிகழ்வுகளின் தொகுப்பு, சைகை மொழியில் விளக்கம்; தொடங்கி வைத்த முதல்வர்.!
சட்டமன்ற நிகழ்வுகளின் தொகுப்பினை, சைகை மொழியில் விளக்கமளித்திடும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில், பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி பல்வேறு கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதன்படி, சட்டப்பேரவை நிகழ்வுகளை, செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு விலகும் வகையில், சைகை மொழியில் விளக்கும் புதிய நடைமுறையை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார்.
ஏற்கனவே சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலையாக ஒளிபரப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில், செவித்திறன் குறைபாடு மாற்றுத்திறனாளிகளுக்கு இனி இந்த பேரவையின் நிகழ்வுகளின் தொகுப்பு, சைகை மொழியிலும் யுடியூப் மூலம் ஒளிபரப்பு செய்யப்படும்.
இந்த புதிய முறையை பேரவைத்தலைவர் அறையில், சட்டப்பேரவை தலைவர் முன்னிலையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.</p
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தின் சார்பில் செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகள் புரிந்து கொள்ளும் வகையில், சைகை மொழியில் சட்டமன்றப் பேரவை நடவடிக்கைகளின் தொகுப்பினை யூ-டியூப் மூலமாக ஒளிபரப்பு செய்திடும் நிகழ்வினை
1/2 pic.twitter.com/GgN7k4ZYiW
— CMOTamilNadu (@CMOTamilnadu) April 17, 2023
>