சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் பவனில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் எரிபொருள் சிக்கனம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தியன் ஆயில் சார்பில் நெருப்பில்லாமல் சமைக்கும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஏரளமான பெண்கள், மாணவர்கள், சமையல் கலைஞர்கள் என பல்வேறு தரப்பு மக்களும் கலந்துகொண்டனர். பின்னர் இந்நிகழ்ச்சியில் எரிபொருளை பயன்படுத்தாமல் வித்தியாசமான முறையில் உணவுகளை தயாரித்து அவர்களின் திறமையை வெளிப்படுத்தினர்.
இதுபோன்று எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி ஈரோட்டில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான பெண்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்தியன் ஆயில் கார்பரேசன் நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற இந்த பேரணியை ஈரோடு கோட்டாட்சியர் தொடங்கி வைத்தார். அப்போது, எரிபொருள் சிக்கன உறுதிமொழியை அனைவரும் ஏற்று கொண்டனர். இதைத்தொடர்ந்து நகரின் முக்கிய பகுதிகள் வழியே சென்ற ஊர்வலத்தில், எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தும் விதமாக விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திச் சென்றனர்.
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…
இஸ்லாமாபாத் : நேற்று போலன் மாவட்டத்தில் பலுசிஸ்தான் கிளர்ச்சி அமைப்பான பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) சுமார் 500 பயணிகளுடன்…
டெல்லி : தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் வரும் 22 ஆம் தேதி திமுக சார்பில் ஆலோசனைக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு…
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு தொடங்கியதிலிருந்து அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்கான விஷயமாக மாறியிருக்கிறது. ஏனென்றால், இந்த கூட்டத்தொடரில்…
சென்னை : மும்மொழிக் கொள்கை தொடர்பான விவாதத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப அமைச்சர்…