அடுப்பு இல்லாமல், நெருப்பு இல்லாமல் சமைக்கும் போட்டி.! திரளாக கலந்து கொண்ட மாணவர்கள்.!

Default Image
  • இந்தியன் ஆயில் சார்பில் நெருப்பில்லாமல் சமைக்கும் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் பவனில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் எரிபொருள் சிக்கனம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்றது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் பவனில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் எரிபொருள் சிக்கனம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தியன் ஆயில் சார்பில் நெருப்பில்லாமல் சமைக்கும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில்  ஏரளமான பெண்கள், மாணவர்கள், சமையல் கலைஞர்கள் என பல்வேறு தரப்பு மக்களும்  கலந்துகொண்டனர். பின்னர் இந்நிகழ்ச்சியில் எரிபொருளை பயன்படுத்தாமல் வித்தியாசமான முறையில் உணவுகளை தயாரித்து அவர்களின் திறமையை வெளிப்படுத்தினர்.

இதுபோன்று எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி ஈரோட்டில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான பெண்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்தியன் ஆயில் கார்பரேசன் நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற இந்த பேரணியை ஈரோடு கோட்டாட்சியர் தொடங்கி வைத்தார். அப்போது, எரிபொருள் சிக்கன உறுதிமொழியை அனைவரும் ஏற்று கொண்டனர். இதைத்தொடர்ந்து நகரின் முக்கிய பகுதிகள் வழியே சென்ற ஊர்வலத்தில், எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தும் விதமாக விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திச் சென்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்