#BREAKING: விஜயகாந்த் விருகம்பாக்கத்தில் போட்டி..?
தேமுதிக தலைவர் விஜயகாந்த் விருகம்பாக்கத்தில் போட்டியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் வருகின்ற 12-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால், அனைத்து கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதனால், தேமுதிக உடன் கடந்த 27-ஆம் தேதி முதல் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு இணையாக 23 ஒதுக்க வேண்டும், மேலும் ஒரு ராஜ்யசபா தொகுதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தேமுதிக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதிமுக சார்பில் 12 தொகுதிகள் மட்டுமே ஒதுக்குவதாக கூறப்பட்டது என தகவல் வெளியானது.
இதைதொடர்ந்து, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்ட நேற்று தேமுதிக உடன் மூன்றாம் கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது முன்பைவிட பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதில், 15 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா தொகுதியும் ஒதுக்குவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுகுறித்து அதிமுக தரப்பிலிருந்து உறுதி செய்யப்படவில்லை தேமுதிக தரப்பில் இருந்து மட்டுமே இந்த தகவல் வெளியானது.
இந்நிலையில், தேர்தலில் விஜயகாந்த் போட்டியிட முடியாத பட்சத்தில் தேமுதிக வாக்கு சதவீதம் குறையும் என கூறப்பட்ட நிலையில், விருகம்பாக்கத்தில் விஜயகாந்த் போட்டியிடுவார் எனவும் தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் வேலூர் தொகுதியிலும், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அரியலூர் அல்லது பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுவார் எனவும், திருவண்ணாமலையில் அடுத்த வாரம் பிரேமலதா விஜயகாந்த் பரப்புரை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.