மக்களவை தேர்தலில் போட்டியா? – அண்ணாமலை கொடுத்த அதிரடி அறிவிப்பு!

annamalai

Annamalai : நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் கட்சி தலைமை உத்தரவிட்டால் போட்டியிடுவேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு மோடி மீண்டும் பிரதமராக கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்திலும், தமிழக பாஜகவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் என்ற எண்ணத்திலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரை 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சென்று சமீபத்தில் திருப்பூரில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நிறைவு பெற்றது.

Read More – போதைப்பொருள் கடத்தல் வழக்கு – ஜாபர் சாதிக்கிற்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தமிழகத்தில் இருந்து குறைந்தபட்ச எம்பிகளையாவது டெல்லிக்கு அனுப்ப வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுடன் அண்ணாமலை தீவிரமாக அரசியல் களத்தில் செயல்பட்டு வருகிறார். இந்த சூழலில், மக்களவை தேர்தலில் போட்டியிடுவீங்களா என்ற செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, கட்சி தலைமை உத்தரவிட்டால் போட்டியிடுவேன் என அண்ணாமலை பதிலளித்துள்ளார். ஏற்கனேவே, கட்சி பணிகளை மேற்கொள்ளவே நேரம் சரியாக இருப்பதால், தேர்தலில் போட்டியிடமாட்டேன் என தெரிவித்திருந்த நிலையில், தற்போது இவ்வாறு கூறியுள்ளார்.

Read More – பிப்ரவரில் 86.15 லட்சம் பேர் பயணம்.. சென்னை மெட்ரோ அறிவிப்பு..!

சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சென்னை YMCA மைதானத்தில் வரும் 4ம் தேதி நடைபெறவுள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பார். எந்தெந்த கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, பாஜகவின் பொதுக்கூட்ட மேடையில் யாரெல்லாம் இருப்பார்கள் என ஓரிரு நாட்களில் தெரிவிக்கிறேன் என்றார்.

இதன்பின், மக்களவை தேர்தலில் போட்டியா, எந்த தொகுதி என செய்தியாளர் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து அண்ணாமலை கூறியதாவது, கட்சி தலைமை தன்னை தேர்தலில் போட்டியிடு என்று சொன்னால் நான் நிச்சயமாக போட்டியிடுவேன். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளையும் சமமாக பார்த்துதான் வேலை செய்துள்ளேன். இதனால், எனக்கு தனிப்பட்ட முறையில் விருப்பு, வெறுப்பு எதுமே கிடையாது.

Read More – பொதுத்தேர்வுக்காக அமைச்சர் தங்கம் தென்னரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு..!

எனவே, கட்சி தலைமை போட்டியிடு என்று சொன்னால் போட்டியிட போறேன், எங்கே என்று சொன்னாலும் அங்கு போட்டியிட போறேன், தேர்தல் பணிகளை செய்ய சொன்னால் செய்யப்போறேன் என்று கூறிய அண்ணாமலை, நான் கட்சி தலைமையிடம் எதுவுமே கேட்கவில்லை, அனைத்தையும் தலைமை முடிவு செய்யும் என தெரிவித்தார். கரூர் தொகுதியில் அண்ணாமலை போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், இவ்வாறு கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்