2 தொகுதிகளில் போட்டி.. ஆர்.கே நகர் போட்டியா..? – தினகரன் விளக்கம்..!

Default Image

தற்போது வரை 2 தொகுதிகளில் போட்டியிட உள்ளேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அப்போது செய்தியாளர் நீங்கள் எத்தனை தொகுதிகளில் போட்டியிட உள்ளீர்கள் என கேள்வி எழுப்பினார். அதற்க்கு தினகரன், 2 நாள்களில் அறிவிக்க உள்ளேன். அப்போது தெரியப்போகிறது என கூறினார்.

1 அல்லது 2 தொகுதிகளில் போட்டி என கேள்வி எழுப்பியதற்கு, தற்போது வரை 2 தொகுதிகளில் போட்டியிட உள்ளேன் என கூறினார். அப்போ ஆர்.கே நகர் எதிர்பார்க்கலாமா..? என கேட்டதற்கு எதிர்பார்க்கலாம் என டிடிவி தினகரன் கூறினார்.

எப்போது ஒவைசி உடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. திடீரென ஒரு அறிவிப்பாக உள்ளது என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, அவர்களுடன் 15 நாள்களாக பேசிகொண்டு இருக்கிறேன். 2 மாதங்களாக அவர்கள் எங்கள் தொடர்பில் உள்ளனர். தேர்தல் அறிவிப்பு வந்ததும் அவர்களை அழைத்து பேசினோம். நேற்று ஒவைசி வருவதாக இருந்தது. சில காரணங்களால் வரமுடியவில்லை என தினகரன் தெரிவித்தார்.

 அமமுக பாரிஸ்டர் அசதுத்தீன் உவைசி M.P., தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ்-ஏ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியும் (AIMIM) கூட்டணி அமைத்து தோதலைச் சந்திப்பது என முடிவு செய்யப்பட்டதாக நேற்று தினகரன் அறிவித்தார். மேலும் , வாணியம்பாடி, கிருஷ்ணாகிரி, சங்கராபுரம் ஆகிய மூன்று தொகுதிகளை ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்