கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு; தமிழ்நாடு அரசின் கடமை – ஓ.பன்னீர்செல்வம்…!

Published by
Edison

கொரோனாவால் உயிரிழந்த அனைத்துக் குடும்பத்தினருக்கும் இழப்பீடு சென்றடைவதை கண்காணிப்பது தமிழ்நாடு அரசின் கடமை என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைத்து காட்டப்படுவதாக தகவல்கள் வந்தபோது, தமிழ்நாடு அரசு எவ்விதமான நிவாரணமும் கொரோனாவால் உயிரிழந்த குடும்பங்களுக்கு வழங்காத நிலையில்,அதை குறைத்து காட்ட வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இல்லை என்று கூறியிருந்த மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள்,

கொரோனா இல்லை:

மேலும்,ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது கொரோனா உறுதி செய்யப்பட்டு, பின்னர் மாரடைப்பு காரணமாகவோ அல்லது நுரையீரல் பாதிப்பு காரணமாகவோ உயிரிழந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டு கொரோனா தொற்று
இல்லை என்ற முடிவு வந்தால், அவருடைய உயிரிழப்புக் காரணம் கொரோனா இல்லை என்று தெரிவித்திருந்தார்.

தேசிய சிகிச்சை கோவிட் வழிகாட்டி நெறிமுறைகள்:

அதே சமயத்தில், ஐ.சி.எம்.ஆர். மருத்துவமனை ஆராய்ச்சி அதிகாரி ஒருவர் கூறிய கருத்தினை நான் இங்கே குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன். அதாவது, ஒருவர் மாரடைப்பு காரணமாக இறந்திருக்கலாம். ஆனால் அந்த மாரடைப்பிற்கு நுரையீரல் செயலின்மை காரணமாக இருந்து, அந்த நுரையீரல் செயலின்மைக்கு காரணம் கொரோனா நோய்த் தொற்றாக இருந்தால், அந்த உயிரிழப்புக்கு காரணம் கொரோனா என்றுதான் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், இதனை சிகிச்சை அளிக்கும் மருத்துவர் அதற்குரிய படிவத்தில் குறிப்பிட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார். மேலும், ஒருவருக்கு கொரோனா தொற்றிற்கான சிகிச்சை மேற்கொண்டிருக்கும்போது, கொரோனா பரிசோதனை மறுபடியும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற பரிந்துரை தேசிய சிகிச்சை கோவிட் வழிகாட்டி நெறிமுறைகளில் இல்லை என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு:

இந்தச் சூழ்நிலையில்,கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு குறைந்தபட்ச உதவி கிடைக்கும் வகையில் புதிய வழிமுறைகளை ஆறு வாரங்களுக்குள் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வகுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம்,நாட்டின் பொருளாதார நிலைமை உட்பட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு நிர்ணயிக்கலாம் என்றும், இறப்பு சான்றிதழ் வழங்கும் நடைமுறையை எளிமையாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய உருவாகியுள்ள நிலையில், அரசு இழப்பீட்டை அளிக்கும் சூழ்நிலை ஐ.சி.எம்.ஆர். வழிகாட்டி நெறிமுறைகளின்படி இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்வதும், கொரோனாவால் உயிரிழந்த அனைத்துக் குடும்பத்தினருக்கும் இழப்பீடு சென்றடைவதை கண்காணிப்பதும் தமிழ்நாடு அரசின் கடமை.

அனைத்து குடும்பங்களும் நிவாரணம்:

எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாக கவனம் செலுத்தி, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறப்புச் சான்றிதழ்களில் ஏதேனும் தவறு இருப்பின் அதனை நிவர்த்தி செய்து பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களும் நிவாரணம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

Published by
Edison

Recent Posts

அதானி விவகாரம், அமித்ஷா பேச்சு, தற்போது வேறு பிரச்சனை! – ராகுல் காந்தி கடும் குற்றசாட்டு!

அதானி விவகாரம், அமித்ஷா பேச்சு, தற்போது வேறு பிரச்சனை! – ராகுல் காந்தி கடும் குற்றசாட்டு!

டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…

5 hours ago

ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!

ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…

7 hours ago

விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!

சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…

7 hours ago

கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!

சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…

9 hours ago

மல்லிகார்ஜுன கார்கே மீது தாக்குதல்? சபாநாயகரிடம் காங்கிரஸ் பரபரப்பு புகார்!

டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…

10 hours ago

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…

10 hours ago