ஜெயலலிதாவை எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒப்பிடும்போது சிரிப்புதான் வருகிறது – டிடிவி தினகரன்
எந்த வீட்டில் பெண்கள் கையில் அதிகாரம் இருக்கிறதோ, அங்கு ஆண்கள் நிம்மதியாக இருப்பார்கள் என டிடிவி தினகரன் உரை.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் ஒரு நிகழ்வில் உரையாற்றியுள்ளார். அப்போது பேசிய அவர், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற மாபெரும் தலைவர்கள் தற்போது உருவாகவில்லை, உருவாகவும் முடியாது;
ஜெயலலிதாவை எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒப்பிடும்போது சிரிப்புதான் வருகிறது. எந்த வீட்டில் பெண்கள் கையில் அதிகாரம் இருக்கிறதோ, அங்கு ஆண்கள் நிம்மதியாக இருப்பார்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும், ஆணுக்கு பெண் சமமாக மதிக்கின்ற பண்பு தமிழ்நாட்டில் இருப்பதற்கு காரணம் தந்தை பெரியார் மற்றும் அண்ணாவின் முயற்சியே ஆகும் என தெரிவித்துள்ளார்.