இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தாக்குதல் – 4 பேர் கைது
குண்டு வீசப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக தலைமை அலுவலகத்தில் இந்த தாக்குதல் நடத்த்ப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தி-நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக தலைமை அலுவலகத்தில் நேற்று இரவு 9 மணி அளவில் மர்ம நபர்கள் பாட்டில் , கற்கள் போன்ற பொருட்களை வீசியுள்ளனர். அந்த சமயம் கட்சி அலுவலகத்திற்குள் யாரும் இல்லாத காரணத்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக கட்சி நிர்வாகிகள் மாம்பழம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், புகாரை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குற்றவாளிகளை தேடும் பணியிலும் போலீசார் ஈடுபட்டு வந்தனர்.
இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு தொடர்ந்து கேள்வி குறியாகவே இருக்கிறது – ஈபிஎஸ்
இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக தலைமை அலுவலகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதேபகுதியை சேர்ந்த அலெக்ஸ், பாரதி, பார்த்திபன், அருண்குமார் ஆகியோர் கைது செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், அங்கு பணியில் இருந்த காவலர்களுக்கும், கைது செய்யப்பட்டவர்களுக்கும் கருத்து வேறுபாடு இருந்தது தெரிய வந்துள்ளதுள்ளது. மேலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.