பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அரசியலாக்கியதற்காக திமுக வெட்கித் தலைகுனிய வேண்டும் என மாநில தலைவர் அண்ணாமலை ட்வீட்.
1000, 500 நோட்டுக்கள் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. பணமதிப்பிழப்பு தொடர்பான வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 4 நீதிபதிகள் ஆதரவாகும், நீதிபதி நாகரத்னா எதிராகவும் தீர்ப்பளித்திருந்தனர்.
இந்த நிலையில், உச்சநீதிமன்றம் தீர்ப்பு குறித்து மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பணமதிப்பிழப்பு வழக்கு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது. அரசியல் கட்சிகள் தான் பணமதிப்பிழப்பை வைத்து அரசியல் செய்கிறார்கள்.
சாமானிய மனிதர்கள் இதை ஏற்றுக்கொண்டனர். 2016-ஆம் ஆண்டு “பணமதிப்பிழப்பு” நடவடிக்கையின் உரிமைகள், வழிமுறைகள் மற்றும் நோக்கத்தை நிலைநிறுத்தும் தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார வல்லுனர்கள் மற்றும் வேலையில்லா எதிர்ப்பு ஆகியவற்றின் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
முடிவெடுப்பதற்கு முன், ஆறு மாதங்களுக்கும் மேலாக, மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே ஆலோசனை செயல்முறை இருந்தது என்றும் உச்ச நீதிமன்றம் கவனித்தது. ஒருதலைப்பட்சமாக முடிவுகள் எடுக்கப்படவில்லை என்பதையே இது பிரதிபலிக்கிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அரசியலாக்கியதற்காக எதிர்க்கட்சிகள், குறிப்பாக திமுக கட்சியினர் வெட்கித் தலைகுனிய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…