சாமானியர்கள் ஏற்றுக்கொண்டனர் – பணமதிப்பிழப்பு தீர்ப்பு குறித்து அண்ணாமலை ட்வீட்!

Default Image

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அரசியலாக்கியதற்காக திமுக வெட்கித் தலைகுனிய வேண்டும் என மாநில தலைவர் அண்ணாமலை ட்வீட்.

1000, 500 நோட்டுக்கள் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. ணமதிப்பிழப்பு தொடர்பான வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 4 நீதிபதிகள் ஆதரவாகும், நீதிபதி நாகரத்னா எதிராகவும் தீர்ப்பளித்திருந்தனர்.

இந்த நிலையில், உச்சநீதிமன்றம் தீர்ப்பு குறித்து மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பணமதிப்பிழப்பு வழக்கு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது. அரசியல் கட்சிகள் தான் பணமதிப்பிழப்பை வைத்து அரசியல் செய்கிறார்கள்.

சாமானிய மனிதர்கள் இதை ஏற்றுக்கொண்டனர். 2016-ஆம் ஆண்டு “பணமதிப்பிழப்பு” நடவடிக்கையின் உரிமைகள், வழிமுறைகள் மற்றும் நோக்கத்தை நிலைநிறுத்தும் தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார வல்லுனர்கள் மற்றும் வேலையில்லா எதிர்ப்பு ஆகியவற்றின் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

முடிவெடுப்பதற்கு முன், ஆறு மாதங்களுக்கும் மேலாக, மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே ஆலோசனை செயல்முறை இருந்தது என்றும் உச்ச நீதிமன்றம் கவனித்தது. ஒருதலைப்பட்சமாக முடிவுகள் எடுக்கப்படவில்லை என்பதையே இது பிரதிபலிக்கிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அரசியலாக்கியதற்காக எதிர்க்கட்சிகள், குறிப்பாக திமுக கட்சியினர் வெட்கித் தலைகுனிய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்