‘இலக்கிய மாமணி’ விருதுக்கு தகுதியானோரை தேர்வு செய்ய குழு – அரசாணை வெளியீடு.!

Default Image

இலக்கிய மாமணி விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கு குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.

இலக்கிய மாமணி’ விருதுக்கு தகுதியானோரை தேர்வு செய்ய குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் குழு அமைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. உறுப்பினர் செயலராக தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்த நாள் விழாவில், தமிழறிஞர் மூவருக்கு, ‘இலக்கிய மாமணி’ விருது வழங்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார். இயல், இசை, நாடகத்தில் சிறந்த விளங்கும் கலைஞர்களுக்கு தமிழ் நாடு அரசின் சார்பாக கலைமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோல் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில் இலக்கிய மாமணி விருது உருவாக்கப்பட்டு தமிழின் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்கள் மூன்று பேருக்கு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படும். இந்த விருதை வழங்கும் வகையில், தகுதியானோரை தேர்வு செய்ய குழுவும் அமைக்கப்பட்டது.

‘இலக்கிய மாமணி’ விருதுடன் தலா ரூ.5 லட்சம், பாராட்டு சான்றிதல் மற்றும் பதக்கம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இலக்கிய மாமணி விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கு குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்