குடிசை மாற்றுவாரிய குடியிருப்புகளை ஆய்வு செய்ய குழு அமைப்பு..!

சென்னை திருவொற்றியூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்த சம்பவத்தை தொடர்ந்து, குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை ஆய்வு செய்து மதிப்பிட 5 குழுக்கள் அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை திருவொற்றியூர் அரிவாக்குளத்தில் இருக்கும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு, கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதில், மொத்தம் 336 அடிக்குமாடி வீடுகள், நான்கு பிளாக்குகளாக உள்ளன. அவற்றில் டி பிளாக்கில் 24 வீடுகள் உள்ளன. 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களும் வசித்து வருகின்றனர். இடிந்து விழுந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்நிலையில், இந்த சம்பவத்தை தொடர்ந்து சென்னையில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை ஆய்வு செய்து மதிப்பிட 5 குழுக்கள் அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பழுதடைந்த குடியிருப்புகளை இடித்துவிட்டு துரிதமாக புதிய குடியிருப்புகளை கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.