ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு நாளை ஆலோசனை…!

- நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு நாளை ஆலோசனை.
திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு கட்டாயம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். அந்த வகையில், தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த மாதம் பொறுப்பேற்றார்.
இதனையடுத்து, நீட் தேர்வால் தமிழகத்தில் மாணவர்கள் அடைந்துள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.இராஜன் தலைமையில் கல்வியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அடங்கிய உயர்நிலைக் குழு ஒன்று அமைக்கப்படும் என்று தமிழக அறிவித்தது.
இந்நிலையில், ஏ.கே. ராஜன் தலைமையிலான இந்தக் குழு நாளை நண்பகல் 12 மணிக்கு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தவுள்ளனர்.