கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தை நாளை ஆய்வு செய்ய உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், டெல்டா பகுதிகளில் மழை, வெள்ளத்தால் பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்ய அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் குழு ஏற்கனவே அமைக்கப்பட்டு, கணக்கெடுப்பு எடுக்க உத்தரவிட்டுள்ளேன். இன்று அல்லது நாளை அறிக்கையை சமர்ப்பிப்பார்கள்.
அந்த குழு ஆய்வு மேற்கொண்ட அறிக்கையை சமர்பித்ததற்கு பிறகு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வோம். மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய நாளை கன்னியாகுமரி மாவட்டம் செல்கிறேன். மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து மொத்த கணக்கெடுப்பு வந்தபிறகு ஆய்வறிக்கையை பிரதமரிடம் அளித்து நிதி கோருவோம்.
மழைக்கால நடவடிக்கைகள் முடிந்த பிறகு கடந்த ஆட்சியில் வெள்ள பாதிப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். முந்தைய ஆட்சியில் நடந்த முறைகேடுகளை கண்டறிய விசாரணை கமிஷன் அமைக்கப்படும். எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு பற்றி கவலை இல்லை. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்துதான் வேலை செய்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…