அதிமுகவின் முறைகேடுகளை கண்டறிய விசாரணை கமிஷன் – முதல்வர் உறுதி

Default Image

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தை நாளை ஆய்வு செய்ய உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்.  

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், டெல்டா பகுதிகளில் மழை, வெள்ளத்தால் பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்ய அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் குழு ஏற்கனவே அமைக்கப்பட்டு, கணக்கெடுப்பு எடுக்க உத்தரவிட்டுள்ளேன். இன்று அல்லது நாளை அறிக்கையை சமர்ப்பிப்பார்கள்.

அந்த குழு ஆய்வு மேற்கொண்ட அறிக்கையை சமர்பித்ததற்கு பிறகு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வோம். மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய நாளை கன்னியாகுமரி மாவட்டம் செல்கிறேன். மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து மொத்த கணக்கெடுப்பு வந்தபிறகு ஆய்வறிக்கையை பிரதமரிடம் அளித்து நிதி கோருவோம்.

மழைக்கால நடவடிக்கைகள் முடிந்த பிறகு கடந்த ஆட்சியில் வெள்ள பாதிப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். முந்தைய ஆட்சியில் நடந்த முறைகேடுகளை கண்டறிய விசாரணை கமிஷன் அமைக்கப்படும். எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு பற்றி கவலை இல்லை. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்துதான் வேலை செய்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்