வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.101 உயர்வு.!
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு மாதந்தோறும் எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. மாதத்தின் முதல் நாள் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும்.
அதே போல இந்த மாத தொடக்க நாளான (நவம்பர் 1) இன்று சிலிண்டர் விலை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 19 கிலோ வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை. 918 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், வர்த்தக உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை கடந்த மாதம் போல இந்த மாதமும் ஏற்றம் கண்டுள்ளது.
530-வது நாளாக பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) விலை மாற்றமில்லாமல் விற்கப்படுகிறது.
கடந்த மதம் அக்டோபர் 1ஆம் தேதி 203 ரூபாய் உயர்ந்து 1695 ரூபாயாக இருந்த சிலிண்டர் விலையானது 1898 ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதே போல, இந்த மதமும், (நவம்பர் 1) வழக்கம் போல சிலிண்டர் விலை ஏற்றம் கண்டு சென்னையில். 19 கிலோ வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலையானது 101 ரூபாய் உயர்ந்து 1898 ரூபாயில் இருந்து ரூ.1999க்கு விற்கப்படுகிறது.
டெல்லியில், வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலையானது மாற்றமின்றி 1833 ரூபாயாக உள்ளது குறிப்பிடத்தக்கது. சர்வதேச நாடுகளுக்கு இடையே போர் தொடர்வதால் கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. போர் தொடர்வதன் காரணமாக சிலிண்டர் விலை மேலும் ஏற்றமடையும் எனவும் கூறப்படுகிறது.