gas cylinder [Image Source : Financial Express]
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கச்சா எண்ணெய்யின் விலை அதிகமாகும் போது சிலிண்டர் விலையும் அதிகரிக்கும் அவை குறையும்போது சிலிண்டர் விலையும் குறையும்.
ஒவ்வொரு மாதத்தின் தொடக்க நாளில் பெரும்பாலும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படும். இந்நிலையில், திடீரென இன்று யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வணிக சிலிண்டரின் விலை குறைந்துள்ளது. இதன் படி சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.39 குறைந்து ரூ.1,929.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் 19 கிலோ எடைகொண்ட சிலிண்டரின் விலையில் ரூ.203 உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை செப்டம்பரில் நிலவிய அதே விலையில் எந்த மாற்றமுமின்றி ரூ.918.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை குறையுமா ..? என இல்லத்தரசிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
சென்னை : கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த ஏப்ரல் 5-ம் தேதி பூப்பெய்திய…
சென்னை : இன்னும் ஓராண்டில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி படத்தை பார்த்த அஜித் ரசிகர்கள் படம் தாறுமாறாக இருப்பதாக தங்களுடைய…
சென்னை : நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று விழுப்புரம், தைலாபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை…
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 9) நடைபெறும் ஐபிஎல் 2025-ன் 24-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)…