2022-23 ஆண்டு பட்ஜெட் குறித்து வைரலாகும் ஆட்டோவில் எழுதப்பட்டிருந்த கருத்து..!
சென்னையில் உள்ள ஒரு ஆட்டோவில் 2022-23 ஆண்டு பட்ஜெட் குறித்து எழுதப்பட்டிருந்த கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நாடாளுமன்றத்தில் நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில், அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட விஷயம் ஒன்றுதான் அது தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டது பலர் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியது.
தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை என்ற அறிவிப்புக்கு பல அரசியல் தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் பலர் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் மூலம் தங்களது கருத்தை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் உள்ள ஒரு ஆட்டோவில் 2022-23 ஆண்டு பட்ஜெட் குறித்து எழுதப்பட்டிருந்த கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த ஆட்டோவில் “பட்ஜெட் சிறுகுறு தொழில்முனைவோருக்கு ஏமாற்றம் கார்பெட் நிறுவனங்களுக்கு 12% வரியிலிருந்து 7% வீதமாக சலுகை. சொந்த மக்களிடம் அதிக வரி வசூலித்ததாக பெருமைபடுவது. வரிவருவாய் அதிகம் உள்ளது. ஆனால், பொதுத்துறை மிக மிக குறைந்த விலையில் விற்க துடிப்பது ஏன் ..? யார் நலனில் அக்கறை ..? மக்களே சித்திப்போம் என எழுதப்பட்டுள்ளது.