விஜய்க்கு ஆதரவு.? திராவிடம் பற்றி பிரபாகரன் கூறியது என்ன.? சத்யராஜ் புது விளக்கம்.!
திராவிட குடும்பத்தில் இருந்து வந்த தமிழ், இந்தியாவின் பழமையான மொழிகளில் ஒன்றாக திகழ்கிறது என பிரபாகரன் பதிவிட்டுள்ளதாக நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.

சென்னை : திராவிடமும் தமிழ் தேசியமும் இந்த மண்ணின் இரு கண்கள் என தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் அக்கட்சித் தலைவர் விஜய் பேசினார். இதற்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
திராவிடம் என்பது தமிழ் தேசிய மக்களை ஆள வேண்டும் என நினைப்பது, தமிழ் தேசியம் என்பது மற்ற மொழி பேசும் மக்களை போல தமிழ் பேசும் மக்களும் வாழ வேண்டும் என்பது இரண்டும் எப்படி ஒன்றாகும், விஷமும், விஷமுறிவு மருந்தும் எப்படி ஒன்றாகும் என கடுமையாக விமர்சித்தார் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்.
இப்படியாக திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்றா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ள நிலையில், இதற்கு இலங்கை தமிழ் தேசிய தலைவராக கருதப்படும், மறைந்த விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் கூறிய கருத்தை நடிகர் சத்யராஜ் அண்மையில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்து கொண்டார்.
நடிகர் சத்யராஜ் பேசுகையில், “மேதகு பிரபாகரன் ஒரு கடிதம் எழுதுகிறார். விடுதலை ராஜேந்திரன் அவர்கள் இதனை பதிவு செய்துள்ளார். அந்த கடிதத்தில், ஆங்கிலத்தில் குறிப்பிடுகையில், தமிழ் ஆசியாவின் கலாச்சாரத்தை காப்பாற்றி வருகிறது. திராவிட குடும்பத்தில் இருந்து வந்த தமிழ், இந்தியாவின் பழமையான மொழிகளில் ஒன்றாக திகழ்கிறது. தமிழ் மொழியானது, தமிழ்நாடு, சிங்கப்பூர், மலேசியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பேசப்பட்டு வருகிறது. என்று குறிப்பிட்டுள்ளார்.
கிட்டத்தட்ட ‘திராவிடமும் தமிழ் தேசியமும் இரு கண்கள்’ என்ற விதத்திலேயே பிரபாகரன் கூறி உள்ளார். அதைத் தாண்டி நாம் பேசுவதற்கு ஒன்றுமில்லை. ‘தமிழ் மொழி பேசும் திராவிடர்களாகிய நாங்கள்’ என்று தமிழ்தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களே கூறுகிறார்கள். இதைவிட தமிழ் தேசியமும் திராவிடமும் ஒன்று என்று கூறி வேறு எதுவும் தேவையில்லை” என்று சத்யராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
விடுதலை புலிகள் தலைவர் பிரபரகன் அவர்களையே கொள்கைத் தலைவராக கொண்டு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியான சூழலில் பிரபாகரன் அவர்களே தமிழ் தேசியமும் திராவிடமும் ஒன்று என்பது போல கருத்து தெரிவித்துள்ளார் என தவெக தலைவர் விஜய் கூறிய திராவிட கருத்துக்கு ஆதரவு தெரிவிப்பது போல நடிகர் சத்யராஜ் பதிவிட்டுள்ளது அரசியல் களத்தில் மீண்டும் பேசுபொருளாகி உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025
ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை பெற்றிருந்தது என்னுடைய கௌரவம்! பிரதமர் மோடி பதிவு!
February 24, 2025
NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..
February 24, 2025
தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?
February 24, 2025
தவெக-வில் இணைகிறாரா காளியம்மாள்? அறிக்கையில் ‘இதை’ கவனித்தீர்களா?
February 24, 2025