அதிமுகவில் இணைந்த நகைச்சுவை நடிகர்!!
- சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி வேட்பாளரை அறிவிக்கும் முன்னரே பிரச்சாரத்தை துவங்கி உள்ளது
- திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தலா 20 தொகுதிகளில் போட்டியிடுகின்றன
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே உடனே கட்சிகளும் அதன் கூட்டணி கட்சிகளும் பரபரப்பான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி வேட்பாளரை அறிவிக்கும் முன்னரே பிரச்சாரத்தை துவங்கி உள்ளது. இதனை நாகர்கோவிலில் துவக்கி வைத்தார் கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
மொத்தமாக ஏழு கட்டமாக நடைபெறும் தேர்தலில் தமிழகம் ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தலை காண இருக்கிறது. திமுக அதிமுக அனைத்து கூட்டணிகளும் அறிவிக்கப்பட்டு விட்டதால் கட்சி வேட்பாளர்களை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஓரிரு கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து விட்டனர்.
இத்தேர்தலில் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தலா 20 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. மற்றவை அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டு விட்டது.
இவையனைத்தும் ஒருபுறம் இருக்க , தற்பொழுது ஓபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார் நகைச்சுவை நடிகர் விஜய் கணேஷ். இந்நிகழ்வு இன்று மதியம் நடைபெற்றது.