கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் 40 பேருக்கு கொரோனா வா..?
சென்னை கீழ்ப்பாக்கத்தில் மனநல காப்பகத்தில் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தமிழக அரசின் மனநல காப்பகத்தில் 800 பேர் மனநல சிகிச்சை பெற்று வருகிறார்கள், மேலும் அங்கு 40 வார்டுகள் உள்ளது, இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு அங்குள்ள சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது, உடனடியாக அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது பரிசோதனையில் இவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் அங்குள்ள 9வது வார்டில் சிகிச்சை பெற்றுவந்த 29 பேருக்கும் 6வது வார்டில் உள்ள 2 பேர் மற்றும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட, 40 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, மேலும் முக்கியமாக மருத்துவமனையில் இயக்குனர் மற்றும் மேற்பார்வையாளர் களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது குறிப்பிடதக்கது.
இதுகுறித்து அங்கு பணியாற்றும் ஊழியர்கள் உண்மையில் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை கூற மறுத்துள்ளார்கள் மேலும் இங்கு பணியாற்றும் அணைத்து ஊழியர்களுக்கும் முழு பாதுகாப்பு கவச உடை வழங்கவில்லை, மேலும் கையுறை மற்றும் மாஸ்க் மட்டுமே வழங்குகின்றனர். இதுதான் நோய் தொற்று பரவியதற்கு முக்கிய காரணம் என்றும் கூறியுள்ளனர்.