ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி கோவை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் வருட வருடம் விமர்சையாக கொண்டாடப்படும் பாரம்பரிய திருவிழாக்களில் ஒன்று ஓணம். இந்த வரும் கொரோனா பாதிப்பு காரணமாக பல கட்டுபாட்டுகளை அரசாங்கம் விதித்துள்ளது. ஆம் வீடுகளில் மட்டும் ஓண விழாவை கொண்டாட வேண்டும் என்றும் , பொது இடங்களில் ஓணம் நிகழ்ச்சிகளை நடத்த கூடாதும் என்றும் கூறி கேரள அரசு தடை விதித்துள்ளது.
இந்தநிலையில், கோவை மாவட்டத்திலும் ஏராளமான மலையாளிகள் வசித்து வருவதால் அங்கும் ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவார்கள். அந்த வகையில் ஓணம் பண்டிகையான ஆகஸ்ட் 31-ம் தேதி கோவை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவிட்டுள்ளார்.
அங்குள்ள கருவூலம் போன்ற பாதுகாப்பு அலுவலகங்கள் குறைந்த ஊழியர்களை கொண்டு இயங்கும் என்றும், மற்ற அனைவருக்கும் உள்ளூர் விடுமுறை என்றும் அறிவித்துள்ளார். மேலும், இந்த விடுமுறை தினத்திற்கு ஈடாக செப்டம்பர் 12-ம் தேதி வேலை நாளாக கருதப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ஓணம் பண்டிகையை மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பாதுகாப்புடன் கொண்டாட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…