இன்று முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறப்பு…! – அண்ணா பல்கலைக்கழகம்
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் B.E., B.Tech., B.Arch., M.Arch முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இன்று கல்லூரிகள் தொடங்குகிறது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவிலும் இந்த வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், வைரஸின் தாக்கம் சற்று தணிந்து உள்ளது.
இதனையடுத்து, தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிற நிலையில், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு பிப்ரவரி 18ஆம் தேதி வகுப்புகள் ஆரம்பித்து தொடங்கி மே 21-ஆம் தேதி வரை நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதனையடுத்து, சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் B.E., B.Tech., B.Arch., M.Arch முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இன்று கல்லூரிகள் தொடங்குகிறது. மேலும், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு மார்ச்-15ம் தேதியும், மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு ஏப்ரல் 5ம் தேதித்தும் வகுப்புகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.