ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை இழந்ததால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை.!

Default Image

சென்னையில் ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை இழந்த விரக்தியில் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை : ஏழுகிணறு போர்ச்சுகிசீயர் தெருவைச் சேர்ந்தவர் அருண்குமார். இவருடைய மனைவி சாந்தி. இவர்களுடைய மூத்த மகள் தான் மகாலட்சுமி. 19 வயதான இவர், சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு  பி.காம் படித்து வந்தார். இதற்கிடையில். கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை பார்த்து, ஆன்லைன் மூலம் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டார்.

அதில், மகாலட்சுமி கிட்டத்தட்ட ரூ.30,000 வரை பணத்தை கட்டி இழந்துள்ளார். இந்த சம்பவம் அவருடைய தயார் சாந்திக்கு தெரியவர குடும்பம் ஏற்கனவே கஷ்டத்தில் இருக்கிறது. பிறகு எதற்காக இப்படி செய்தாய்..? என கேள்வி கேட்டு தீட்டியுள்ளார்.

இதனால் சற்று வேதனையடைந்த மகாலட்சுமி நேற்று வீட்டில் உள்ள தன்னுடைய அறையில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அப்பகுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை இழந்ததால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்