தேங்காய் உரிப்பது, தென்னை மரம் ஏறுவது போன்ற விவசாயப் பணிகளை செய்யும் கல்லூரி மாணவி.!
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அர்ச்சுனாபுரம் கிராமத்தை சேர்ந்த சுப்பையா அவரது முத்துலட்சுமி இவர்களுக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளன. மின்சாரம் இல்லாத ஒரு ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார்கள். முதல் 2 பெண்களுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், கடைசி 2 பெண்கள் கல்லூரியில் படித்து வருகின்றனர். அதில் கடைசி பெண்ணாக காளியம்மாள் என்ற பெண், தனது குடும்பத்தில் உள்ள ஏழ்மையை புரிந்து, கல்லூரிக்கு சென்றுவிட்டு, மாலை நேரத்தில் தேங்காய் உரிப்பது, தென்னை மரம் ஏறுவது போன்ற விவசாயப் பணிகளை செய்து வருகிறார். இதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து குடும்பத்திற்கு செலவு செய்து வரும் இவர், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தையும் கற்று வைத்துள்ளார்.
அந்த பெண் கூறுகையில், தனக்கு அரசு உதவி கிடைத்தால் தனது வாழ்க்கையில் முன்னேறுவதற்கு நன்றாக இருக்கும் என்று தன்னமிக்கையுடன் இருந்து வருகிறார். இதையடுத்து காளியம்மாள் பெற்றோர் கூறுகையில், தங்கம் மகள் உழைத்து, அவருக்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்வதாகவும், தங்களது குடும்பத்தின் வறுமை நிலையை கருத்தில் கொண்டு, அரசு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். மேலும் அரசு மற்றும் சமூக ஆர்வலர்கள் உதவினால், அவர் இன்னும் பல சாதனைகள் செய்ய முடியும் என்பதே அப்பகுதி மக்கள் கருத்து கூறுகின்றனர்.