#BREAKING: கல்லூரி மாணவர் சேர்க்கை- முதல்வர் ஆலோசனை..!
கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் உயர்கல்விதுறை அமைச்சருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.
பிளஸ் டூ மாணவர்களின் தேர்வு மதிப்பெண் கணக்கீடும் முறை வெளியிட்டுப்பட்டுள்ள நிலையில், கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பாக உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடியுடன், தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை ன் நடத்தி வருகிறார். தமிழகத்தில் வரும் ஜூலை 2-ம் வாரம் கல்லூரி சேர்க்கை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 12 வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் 9 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதனால் கல்லூரிகளில் உள்ள இடங்களை அதிகரிப்பது குறித்தும், கொரோனா காலம் என்பதால் அரசு கலை கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் விண்ணப்ப கட்டணத்தை குறைப்பது குறித்தும் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
வழக்கமாக தமிழகத்தில் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்தது 10 சதவீதம் பேர் தேர்ச்சி பெறாமல் இருப்பார்கள் ஆனால் இந்த வருடம் அனைவரும் தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிக மாணவர்கள் உயர்கல்வியில் சேர கல்லூரிக்கு வருவார்கள் என்பதால் இந்த ஆலோசனை பெற்று வருகிறது.