பல்கலைக்கழகங்கள் திறப்பு குறித்த வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு….
தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்தும், இந்த கல்வி ஆண்டில் முதலாண்டில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு தேர்வு நடத்த வேண்டிய கால அட்டவணையையும் பல்கலைக்கழக மானியக் குழுவான யூஜிசி தற்போது வெளியிட்டுள்ளது.
இந்த கல்வி ஆண்டு வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் தொடங்குவதால் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான நாட்காட்டி கீழ்கண்டபடி நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்.
- முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை அக்டோபர் 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.
- முதலாம் ஆண்டு அல்லது முதல் பருவத்துக்கான வகுப்புகள் நவம்பர் 1ம் தேதி முதல் ெதாடங்க வேண்டும்.
- முதல் பருவத் தேர்வுக்கான முன்னேற்பாடுகளை 2021 மார்ச் 1ம் தேதி
- முதல் 2021 மார்ச் 7ம் தேதி வரை செய்ய வேண்டும்.
- தேர்வுகளை 2021 மார்ச் 8ம் தேதி முதல் 26ம் தேதிவரை நடத்த வேண்டும்.
- பருவத் தேர்வுக்கு பிறகான இடைவேளை மார்ச் 27ம் தேதி முதல்
- ஏப்ரல் 4ம் தேதி வரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- அடுத்த பருவத்துக்கான வகுப்புகள் 2021 ஏப்ரல் 5ம் தேதி தொடங்க வேண்டும்.
- அடுத்த தேர்வுக்கான முன்னேற்பாடுகளை ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 8ம் தேதி வரை செய்யலாம்.
- அடுத்த தேர்வுகள் ஆகஸ்ட் 9ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடத்த வேண்டும்.
- பருவத் தேர்வுக்கான இடைவேளை ஆகஸ்ட் 22ம் தேதி முதல் 29ம் தேதி வரை எடுத்துக் கொள்ளலாம்.
- இந்த முதலாண்டு மாணவர்களுக்கு அடுத்த கல்வி ஆண்டு என்பது ஆகஸ்ட் 30ம் தேதியில் தொடங்கும். (மேற்கண்ட மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டால், பல்கலைக்கழகங்கள் இந்த கல்வி ஆண்டை 2020 நவம்பர் 18ம் தேதியில் தொடங்கும் வகையில் திட்டமிடலாம். அதேபோல கற்பித்தல் தொடர்பான பணிகளை ஆன்லைன் முறையிலேயே தொடரலாம்)
- அனைத்து பல்கலைக்கழகங்களும் இந்த கல்வி ஆண்டில் வாரம் 6 நாட்கள் பணிநாட்கள் என்பதை பின்பற்ற வேண்டும். இது 2020-21 மற்றும் 2021-22 வரை பின்பற்றப்பட வேண்டும்.
- கொரோனா தொற்று ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்டு பணப் பிரச்னையில் சிக்கியுள்ள பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் சான்றுகளை திரும்பப் பெறும் போது அனைத்து கட்டணங்களையும் பிடித்தம் ஏதும் இல்லாமல் நவம்பர் 31ம் தேதி வரை திரும்ப வழங்க வேண்டும். டிசம்பர் 31ம் தேதிக்குள் சான்றுகள் திரும்ப கேட்கும் பெற்றோரிடம் அனைத்து கட்டணத்தையும் பிடித்தம் இல்லாமல் வழங்க வேண்டும், அப்படி ஏதாவது பிடித்தம் செய்ய வேண்டியிருந்தால்
- அதிகபட்சமாக 1000 புராசசிங் கட்டணமாக பிடித்தம் செய்யலாம்.
- இந்த கல்வி ஆண்டில் சேரும் மாணவர்கள் தாமதம் இல்லாமல் உரிய நேரத்தில் பட்டங்களை பெறும் வகையில், தாமதத்தை சரிகட்டும் வகையில் பணி நாட்களை இந்த கல்வி ஆண்டில் செயல்படுத்தும் வகையில் இடைவேளை மற்றும் விடுமுறைகளை சரிகட்ட வேண்டும்.
- கடந்த 29.4.20 மற்றும் 6.7.20 ஆகிய தேதிகளில் பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கியமானதாக தெரிவிக்கப்பட்டுள்ள கற்பித்தல் வழிமுறைகளையும், தேர்வு நடத்தும் முறைகள், சமூக இடைவெளி உள்ளிட்ட விதிகளில் மாற்றம் ஏதும் இல்லை.