தமிழகத்தில் கல்லூரி தேர்வுகள் ரத்தாகிறதா? உயர்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்
கல்லூரி தேர்வுகளை ரத்து செய்வது குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டது.ஆனால் இதற்கு இடையில் நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டது.எனவே நாளாக நாளாக மாணவர்களிடையே தேர்வு பயம் அதிகரித்து வந்தது.இதனால் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டது.இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறுகையில், தமிழகத்தில் கல்லூரி தேர்வுகளை ரத்து செய்வது குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.