பால் மணம் மாறா பிஞ்சுகளுக்கு வாழ்வு கொடுத்த சிவகங்கை ஆட்சியர்… மனிதநேயமிக்க எம்.எல்.ஏ மற்றும் சமுக ஆர்வலர்கள்…

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மானாமதுரை மாரி (28) என்பவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வருபவர். இவருக்கு திவ்யா (22) என்ற பெண்ணுடன் திருமணமாகி கடந்த டிசம்பரில் சிவகங்கை அரசு மருத்துவமனையில் இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த சில நாட்களிலேயே ஒரு குழந்தை இறந்துவிட்டது. மற்றொரு குழந்தையுடன் வீடு திரும்பிய பெற்றோர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.அந்த பெண் குழந்தைக்கு மலம் தொப்புள் வழியே வெளியேறியதால் மறுபடியும் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு தனியார் மருத்துவமனையில் அந்த் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்தும் பயனில்லாத நிலையில் மேலும் இரண்டு லட்ச ரூபாய் வரை செலவாகும் என தெரிவித்துள்ளனர், தினசரி கூலி வேலை செய்யும் மாரி வேறு வழியின்றி குழந்தையை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார். இந்தத் தகவல் சமூக வலைதளத்தில் காட்டுத்தீயாக பரவியது. இதைதையடுத்து இந்த செய்தி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் கவனத்திற்குக் கொண்டு சென்ற நிலையில், குழந்தையை முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மதுரை தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.
மேலும் மானாமதுரை தொகுதி அதிமுக எம்எல்ஏ நாகராஜன், சமூக ஆர்வலர்கள் பாலசுப்ரமணியன், சங்கரசுப்ரமணியன் உள்ளிட்டோர் உதவியதன் பேரில் இன்று மதுரை தனியார் மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சைக்கு அந்தக் குழந்தையும் பெற்றோரும் அழைத்துச் செல்லப்பட்டனர். மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட பலரும் உதவியதன் மூலம் குழந்தைக்கு விரைவில் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. இதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன் மானாமதுரை அழகர்கோயில் தெருவைச் சேர்ந்த பிறந்த 10 நாள் ஆன குழந்தைக்கு முதுகில் ஏற்பட்ட கட்டியை அகற்ற முடியாமல் தவித்த பெற்றோர்க்கு மதுரை தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து உதவிய சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் தற்போது இந்தக் குழந்தைக்கும் உதவி உள்ளார் என்பது குறிப்பிட்டத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
March 3, 2025
ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!
March 3, 2025
12ஆம் வகுப்பு தேர்வு : பறக்கும் படை, மாற்றுத்திறனாளிகளுக்கான ஏற்பாடுகள்.., பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!
March 3, 2025
2025 ஆஸ்கார் விருதுகள்! 5 விருதுகளை தட்டி தூக்கிய அனோரா!
March 3, 2025