அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆட்சியர் ஆலோசனை..!
ஈரோட்டில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஈரோடு மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணன் உன்னி ஆலோசனை
ஈரோட்டில் கிழக்கு தொகுதியில் பிப்.27-ஆம் தேதி இடைதேர்த்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து அரசியல் கட்சியினர் தங்களது தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஈரோட்டில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஈரோடு மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணன் உன்னி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் இடைத்தேர்தலுக்கான நடத்தை விதிகள் குறித்து விரிவான விளக்கங்கள் அழைக்கப்பட்டு வருகிறது .