எஸ்பிபி அவர்கள் மீண்டும் கொரோனாவில் இருந்து குணமடைந்து வருவதற்காக இன்று மாலை 6 முதல் 6.05 வரை கூட்டுப் பிரார்த்தனை என்று ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் கடந்த 5ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். எஸ்.பி.பி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.
மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள பாடகர் எஸ். பி. பிக்கு உயிர்காக்கும் எக்மோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், வென்டிலேட்டர் மூலம் அவரது உடல்நிலை குறித்து தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளனர். இதனால் எஸ்பிபி விரைவில் குணமடைந்து வீடு திரும்ப கமல்ஹாசன், பாரதிராஜா, சிவகுமார், ஏஆர். ரஹ்மான், இளையராஜா, ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
மேலும், எஸ்பிபி அவர்கள் மீண்டும் கொரோனாவில் இருந்து குணமடைந்து வருவதற்காக திரையுலக பிரபலங்கள் இணைந்து கூட்டு பிரார்த்தனை செய்யவுள்ளதாக அறிவித்தனர். இந்நிலையில், ரஜினிகாந்த் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பாடும் நிலா… எழுந்து வா! கூட்டுப் பிரார்த்தனை செய்வோம். எஸ்.பி.பி.யை மீட்டெடுப்போம். இன்று மாலை 6 முதல் 6.05 வரை கூட்டுப் பிரார்த்தனை என்று ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…
சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…
கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…