கோவை பெண் ஓட்டுநர் பணிநீக்கம் – விளக்கமளித்த பஸ் உரிமையாளர்…!

Kovai bus driver Sharmila

பெண் ஓட்டுனர் ஷர்மிளா தானாகவே விருப்பப்பட்டு பணியில் இருந்து விலகினார் என பேருந்து உரிமையாளர் விளக்கம். 

கோவையில் முதல் பெண் ஓட்டுனராக அறிமுகமானவர் ஷர்மிளா. இவருக்கு சமூக வலைதளங்களில் மட்டுமல்ல, எங்கு சென்றாலும் வாழ்த்தும், பாராட்டும் கிடைத்து வந்தது. வடவள்ளியில் இருந்து ஒண்டிப்புதூர் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்து டிரைவராக பணியாற்றி வந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அவர்கள் அவரது பேருந்தில் பயணித்து அவருக்கு பாராட்டு தெரிவித்தார். இதனை தொடர்ந்து இன்று, திமுக எம்பி கனிமொழி அவர்கள் பேருந்தில் பயணம் செய்தார்.  அப்போது ஷர்மிளாவுக்கு கனிமொழி எம்பி அவர்கள் தனது வாழ்த்துக்களை தெரிவித்து, அவருடன் சிறிது நேரம் பேசியபடி சென்றுள்ளார்.

இந்த நிலையில், திமுக எம்பி கனிமொழி அவர்களுக்கு பயணித்த போது பயணம் சீட்டுக் கொடுப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தனியார் பேருந்து உரிமையாளர் விளக்கம் அளிக்கையில், பெண் ஓட்டுனர் ஷர்மிளா தானாகவே விருப்பப்பட்டு பணியில் இருந்து விலகினார். அவரை நாங்கள் விலக சொல்லவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்