11ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு.. கோவை முதலிடம், கடைசி இடத்தில் வேலூர்.!
சென்னை: தமிழ்நாட்டில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளது.
சென்னையில் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அரசுத் தேர்வுகள் இயக்கக இயக்குனர் சேதுராமவர்மா, 11ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட்டார். தேர்வு எழுதிய மாணவர்கள் http:// tnresults.nic.in மற்றும் http://dge.tn.gov.in என்ற இணையதளங்களின் வாயிலாக தேர்வு முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம்.
தேர்வு எழுதிய மாணவர்கள் பதிவு செய்த செல்ஃபோன் எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
மாணவ – மாணவிகள் தேர்ச்சி விகிதம்
11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை, பள்ளிக்கல்வித் துறை இன்று வெளியிட்டுள்ளது. 8,11,172 மாணவ, மாணவிகள் தேர்வெழுதிய நிலையில், அதில் 7,39,539 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 7534 மேல்நிலைப் பள்ளிகள் தேர்வெழுதிய நிலையில், அதில் 1964 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. குறிப்பாக, 241 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. 187 சிறைவாசிகள் தேர்வெழுதிய நிலையில், அதில் 170 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாணவிகளே டாப்
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.17% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 3,84,351 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில் 3,35,396 (87.26%) , 4,26,821 மாணவிகள் தேர்வெழுதிய நிலையில் 4,04,143 (94.69%) பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
11ஆம் வகுப்பில் மாணவர்களை விட மாணவிகள் (7.43%) அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், 8221 மாற்றுத் திறனாளி மாணவர்களில் 7,504 (91.27%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சென்டம் எடுத்த மாணவர்கள்
வெளியான பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில், அதிகபட்சமாக கணினி அறிவியல் தேர்வில் 3432 மாணவர்கள் 100/100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். இயற்பியல் -696, வேதியல் – 493, வணிகவியல் – 620, பொருளியல் – 741, கணக்குப் பதிவியல் – 415, கணிதம் – 779, தமிழ் 8, ஆங்கிலம் 13 ஆகியோர் 100/100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். ஏதேனும் ஒரு பாடத்தில் 8418 பேர் 100/100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
பாடங்கள் வாரியான தேர்ச்சி விகிதம்
அறிவியல் பாடப் பிரிவுகள் – 94.31%
வணிகப்பிரிவு பாடப்பிரிவுகள் – 86.93%
கலைப் பிரிவுகள் – 72.89%
தொழிற்பாடப் பிரிவுகள் – 78.72%
இயற்பியல் – 97.23%
வேதியியல் – 96.20%
உயிரியல் – 98.25%
கணிதம் – 97.21%
தாவிரவியல் – 91.88%
விலங்கியல் – 96.40%
கணினி அறிவியல் – 99.39%
வணிகவியல் – 92.45%
கணக்குப் பதிவியல் – 95.22%
அரசுப் பள்ளி தேர்ச்சி விகிதம்
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. இதில், அரசுப் பள்ளி மாணவர்கள் 85.75%, அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளி மாணவர்கள் 92.36%, தனியார் சுயநிதிப் பள்ளி மாணவர்கள் 98.09% தேர்ச்சி பெற்றுள்ளனர். இருபாலர் பள்ளிகளில் 91.61%, 94.46%, ஆண்கள் பள்ளிகளில் 81.37% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
டாப் 10 மாவட்டங்கள்
கோயம்புத்தூர் – 96.02%
ஈரோடு – 95.56%
திருப்பூர் – 95.23%
விருதுநகர் -95.06%
அரியலூர் – 94.96%
பெரம்பலூர் – 94.82%
சிவகங்கை – 94.57%
திருச்சி – 94.00%
கன்னியாகுமரி – 93.96%
தூத்துக்குடி – 93.86%
கடைசி இடம் பெற்ற 10 மாவட்டங்கள்
தமிழகத்தில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. இதில், வேலூர் மாவட்டம் 84.40% தேர்ச்சியுடன் மாநிலத்திலேயே கடைசி இடத்தில் உள்ளது. திருவள்ளூர் – 85.54%, கள்ளக்குறிச்சி – 86.00%, மயிலாடுதுறை- 86.39%, திருப்பத்தூர் 86.88%, காஞ்சிபுரம் – 86.98%, திருவாரூர் 87.15%, கிருஷ்ணகிரி – 87.82%, ராணிப்பேட்டை – 87.86%, புதுக்கோட்டை 88.02%