கோவையில் ஆசிரியரின் பாலியல் தொந்தரவால் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடலை வாங்க மறுத்து போராட்டம்.
கோவையை சேர்ந்த 17 வயது மாணவி ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா என்ற தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு வரை படித்திருந்தார். இதனை அடுத்து இவர் நேற்று தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு, ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து, மாணவியின் பெற்றோர் உக்கடம் போலீசாரிடம் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சடலத்தை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அப்போது தான் மாணவிக்கு பாலியல் தொல்லை இருந்து வந்தது தெரியவந்தது.
ஏற்கனவே படித்த பள்ளியின் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து ஏற்கனவே மாணவி வீட்டில் சொல்லி கதறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுபற்றி பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் இந்த விசயம் வெளியே தெரிந்தால் பள்ளி பெயர் கெட்டுவிடும் என்பதால், அப்படியே மூடி மறைத்து விட்டதாகவும், எனவே சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இதனால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது பெற்றோரும் உறவினரும் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி கடிதம் ஒன்றினை எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தில், ‘யாரையும் சும்மா விடக்கூடாது. ரீத்தா ஓட தாத்தா, எலிசா சாரோட அப்பா, இந்த சார் யாரையும் விடக் கூடாது என்று எழுதி வைத்துள்ளார். இதனையடுத்து மாணவியின் பெற்றோர் தங்கள் மகளுக்கு நேர்ந்த கொடுமை வேறு எந்த மாணவிக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று கதறி அழுதுள்ளனர்.
இதனையடுத்து, தலைமறைவாக இருந்த ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து, அவர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் போக்சோ என 2 பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மாணவியின் உடலை வாங்க மறுத்து, மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், மாணவியின் வீட்டின் முன் போராட்டத்தில் வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பான மற்ற குற்றவாளிகளை கைது செய்யுமாறு வலியுறுத்தி கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை : நேற்று மத்திய கல்வி அமைச்சகம் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விதிமுறையில் முக்கிய திருத்தம் ஒன்றை கொண்டு வந்தது.…
ராஜஸ்தான்: கோட்புட்லி மாவட்டம் கிராத்புரா கிராமத்தின் பதியாலி தானி என்கிற பகுதியில் 150 அடி ஆழம் உள்ள ஆழ்குழாய் கிணற்றில்…
சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை இரண்டு விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர். நெடுந்தீவு…
குஜராத்: இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட…
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கையின் தொடர் கைது நடவடிக்கை, மீனவ குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மீண்டும், எல்லை தாண்டி…
சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு தண்டையார்பேட்டை மெட்ரோ ரயில் சுரங்க…