தமிழகத்தையே சில தினங்களாக உலுக்கிய சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை. கடந்த 7 ஆண்டுகளாக சுமார் 200 க்கும் மேற்பட்ட பெண்களை ஆசை வார்த்தைகள் பேசி தன் வலையில் வீழ்த்தி கூட்டு வன்புணர்வு செய்துள்ளனர் சுமார் 20க்கும் நபர்கள் கொண்ட கும்பல்.
இதில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் சட்டமும் போடப்பட்டது.
மேலும் இவர்களின் பின்னணியில் பல ஆளுங்கட்சி நபர்களும் இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் டிஜிபி ராஜேந்திரன் வழக்கை சிபிசிஐடிக்கு விரைவில் மாற்றப்படும் எனவும் கூறினார்.
பின்பு இதற்க்கு அரசாணை வெளியிட்டு, விசாரணையை துரிதப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டது.
முதலில் பெண்களின் அடையாளத்தை வெளியிடக்கூடாது என்ற அடிப்படை தெரியாமல் போலீசார் புகார் அளித்த பெண்ணின் விவரங்களை வெளியிட்டனர்.
இந்த அரசாணையில், புகார் அளித்த பெண்ணின் விவரங்கள் அரசாணையில் குறிப்பிடப்பட்டிருந்தது.இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.மேலும் இது தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடரப்பட்டுள்ளது.
இதேபோல் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இது தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்தது.அதில் பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளியிட்டதற்கு பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரு.25 லட்சம் இடைக்கால இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்தியதற்காகவும் ,வழக்கின் ஆரம்ப நிலையிலேயே 4 பேருக்கு மட்டுமே தொடர்பு என்று கூறியதற்காகவும் கோவை எஸ்.பி பாண்டியராஜன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்தது.
பொள்ளாச்சி விவகாரத்தில் புகார் தந்த பெண்ணின் பெயரை வெளியிட்டதாக எஸ்.பி.பாண்டியராஜன் மீது புகார் அளித்த நிலையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ உத்தரவு பிறப்பித்துள்ளார்.அதில் கோவை எஸ்.பி.பாண்டியராஜன் மீது நீதிமன்ற உத்தரவுப்படி அரசு நடவடிக்கை எடுக்கலாம். அது தொடர்பாக அறிக்கை அளித்தால் போதுமானது என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
டெல்லி : தலைநகர் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மியின் ஆட்சி காலம் அடுத்த மாதம் நிறைவடைய உள்ள நிலையில், டெல்லியில்…
நீலகிரி : சீனாவில் 14 வயதுக்குட்பட்டோரை அதிகம் பாதித்துள்ள HMP வைரஸ் தொற்றானது இந்தியாவிலும் சிலருக்கு உறுதியாகியுள்ளது என தகவல்கள் வெளியாகின.…
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக…
நேபாளம்: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மீண்டும் நிலநடுக்கம்…
சென்னை : வரும் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட்…
சென்னை: மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான நடிகர் சூர்யாவின் "கங்குவா" திரைப்படம் திரையரங்குகளில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. பாக்ஸ் ஆபிஸிலும்…