தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து அனைத்து கட்சியினரும் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு, மற்றும் வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போயிடுகிறது. போட்டியிடும் 20 வேட்பாளர்களில் 17 வேட்பாளர்களின் பட்டியலை பாஜக வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் 3 வேட்பாளர்களின் பட்டியல் பாஜக விரைவில் வெளியிடம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பாக பாஜக தேசிய மகளிர் அணித் தலைவி வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை தெற்கு வானதி சீனிவாசனுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட வானதி சீனிவாசனுக்கே வாய்ப்பு கிடைத்த்துள்ளது. இந்நிலையில், வருகின்ற சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதி கடுமையான போட்டி நிலவும் தொகுதியாக மாறியுள்ளது. காரணம் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், இங்கு மக்கள் நீதி மய்யம் சார்பாக கமல்ஹாசனும், காங்கிரஸ் சார்பாக மயூரா ஜெயக்குமாரும், பாஜக சார்பில் வானதி சீனிவாசனும் போட்டியிட உள்ளனர்.
கடந்த தேர்தலில் அதிமுக சார்பாக அம்மன் கே. அர்ஜுனன் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்த முறை கோவை தெற்கு தொகுதியில் அதிமுக, திமுக நேரடியாக போட்டியிடவில்லை அதற்க்கு பதிலாக தங்களது கூட்டணி கட்சிகளுக்கே வாய்ப்பு அளித்துள்ளனர். கமல்ஹாசன் முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். மக்கள் நீதி மயய்ம் கட்சி தனித்து அல்லது வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைக்குமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமக, ஐஜேகே கட்சிகளை கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கவுள்ளது.
கமல்ஹாசன் எங்கு போட்டியிடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியை தேர்வு செய்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கோவை தெற்கு, கோவை வடக்கு, சிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் வாங்கிய ஒட்டு அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் திரும்பி பார்க்க வைத்தது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் 1.5 வாக்குகளை பெற்றது.
இதன் காரணமாகவே மக்கள் நீதி மயய்ம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியை தேர்வு செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தேசிய காட்சிகளை எதிர்த்து போட்டியிட்டு வெற்றிபெற்றால் இதனால் கிடைக்கும் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டே இந்த தொகுதியை தேர்வு செய்துள்ளார்.
காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் அரசியல்வாதியான மயூரா ஜெயக்குமார், மயூரா ரேடியோஸ் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வருகிறார். கோயம்புத்தூரை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு ஆதரவு அங்கு உள்ளது.
பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் கோவை தெற்கில் சற்று செல்வாக்கு பெற்றவர். வரும் தேர்தலில் வானதி சீனிவாசன் எளிதாக வென்றுவிடுவார் என்று நினைத்திருந்த நிலையில் கமல்ஹாசன் போட்டியிடுவதாக அறிவித்ததால், கோவை தெற்கு தொகுதி மிகப்பெரிய போட்டி தொகுதியாக மாறியுள்ளது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…